இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை ஹாக்கி…, 3 வது முறையாக பட்டத்தை வென்ற ஜெர்மனி!!

0
இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை ஹாக்கி..., 3 வது முறையாக பட்டத்தை வென்ற ஜெர்மனி!!
இந்தியாவில் களைகட்டிய உலக கோப்பை ஹாக்கி..., 3 வது முறையாக பட்டத்தை வென்ற ஜெர்மனி!!

இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில், பெல்ஜியம் அணியை வீழ்த்தி ஜெர்மனி அணி 3வது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

உலக கோப்பை ஹாக்கி:

இந்தியாவில் ஆடவருக்கான உலக கோப்பை ஹாக்கி தொடர் 16 அணிகளுக்கு இடையே கடந்த 13ம் தேதி முதல் நடைபெற்றது. இந்த தொடரில், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் அணிகள் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தனர். இவர்களுக்கு இடையே இறுதிப் போட்டி நேற்று புவனேஸ்வரில் நடைபெற்றது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில், ஆரம்பம் முதலே பெல்ஜியம் அணியானது வேகம் காட்ட தொடங்கியதால், 10, 11 மற்றும் 59 ஆகிய நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்து அசத்தியது. இதற்கிடையில், ஜெர்மனி அணியும் 29, 41 மற்றும் 48 ஆகிய நிமிடங்களில் கோல் அடித்ததன் மூலம் போட்டியானது 3-3 என்ற கோல் கணக்கில் டிரானாது. இதனால், பெனால்டி ஷாட்டுக்கு போட்டி நகர்ந்தது. இந்த பெனால்டி ஷாட்டில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.

T20 அரங்கில் நிகழாத நியூ ரெகார்ட்…, IND vs NZ 2nd T20 யில் ஒரு சிக்ஸர் கூட இல்லையா??

இதிலும், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் வீரர்கள் 3-3 என்ற கோல்கள் அடிக்க போட்டி சமநிலையே தொடர்ந்தது. இதையடுத்து, மேலும் தலா 2 வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஜெர்மனி வீரர்கள் நிக்லாஸ் வெல்லன் திஸ் பிரின்ஸ் இருவரும் கோல் அடித்து அசத்தினார். ஆனால், பெல்ஜியம் வீரர்களில் ஒருவர் மட்டும் கோல் அடிக்க, ஜெர்மனி அணியானது 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலக கோப்பையும் 3 வது முறையாக வென்று அசத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here