சமீபத்தில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சிறந்து விளங்கிய வீரர்களை அடிப்படையாக கொண்டு, சர்வதேச செஸ் கூட்டமைப்பானது, தரவரிசைப் பட்டியலை புதுப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 2839 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில், 2வது இடத்தை பிடித்த இந்தியாவின் பிரக்ஞானந்தா 2 இடங்கள் முன்னேறி 2727 புள்ளிகளுடன் 20 வது இடத்தை எட்டி உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மேலும், இந்த பட்டியலில் மற்ற இந்திய வீரர்களான, குகேஷ் 2758 புள்ளிகளுடன் 8 வது இடத்தையும், ஜாம்பவானான விஸ்வநாதன் 2754 புள்ளிகளுடன் 9 வது இடத்தையும் விதித் சந்தோஷ் (2716 புள்ளிகள்) 26 வது இடத்தையும் பிடித்துள்ளனர். இனி வரும் செஸ் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ஏற்ப இந்த தரவரிசையில் மாற்றம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒரே போட்டியில் 35 கோல்களை அடித்து அசத்திய இந்தியா…, தகுதி சுற்றில் கெத்து காட்டி அபாரம்!!