உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய வீராங்கனைகள்!!

0
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய வீராங்கனைகள்!!
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: வெற்றியுடன் தொடங்கிய இந்திய வீராங்கனைகள்!!

மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனைகளான, சாக்ஷி சவுத்ரி மற்றும் நூபுர் ஷியோரன் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர்.

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்:

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் எடைப் பிரிவு வாரியாக கலந்து கொள்ள உள்ளனர். இதில், இந்தியா சார்பாக, டோக்கியோ ஒலிம்பிக் நாயகி லோவ்லினா, நிகாத் ஜரீன், சாக்ஷி சவுத்ரி உள்ளிட்டோர் பங்கு பெற்றுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான மேரி கோம் முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற முதல் சுற்றில், இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி கொலம்பியாவின் ஹென்நோ மார்டினெஸ் எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியில், ஆரம்ப முதலே புள்ளி எண்ணிக்கை சாக்ஷி சவுத்ரி அதிகரிக்க தொடங்கினார்.

லியோ படத்தில் இணைந்த மற்றுமொரு வில்லன் நடிகர்..,வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!!

இதனால், 5-0 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவின் சாக்ஷி சவுத்ரி, கொலம்பியாவின் ஹென்நோ மார்டினெஸ் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதே போன்ற மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் நூபுர் ஷியோரன், அபியோலா ஜேக்மேனை எதிர்த்து மோதினார். இந்த போட்டியில், இந்தியாவின் நூபுர் ஷியோரன் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here