100 நாடுகளுக்கும் மேல் பரவிய டெல்டா ரக கொரோனா.. எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!!!

0
இந்தியாவில் உருவெடுத்த புதிய வகை கொரோனா வைரஸ் - உலக சுகாதார மையம் பகிர் அறிவிப்பு!

உலகில் தற்போது உருமாற்றம் அடைந்த டெல்டா ரக வைரஸ் 100 நாடுகளுக்கும் மேல் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் டெட்ரோஸ் அதானோம் தற்போது உலகம் மிக ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா முதல் அலையில் சிக்கி மீண்டு வந்த உலக நாடுகள் தற்போது இரண்டாம் அலையில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த இரண்டாம் அலைக்கு காரணமாக இருப்பது உருமாற்றம் அடைந்த டெல்டா ரக வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதே மிகவும் கவலைக்குரிய விஷயம். என்னென்றால் பிற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் போல இல்லாமல் இந்த டெல்டா ரக வைரஸ் பரவும் வேகமும், வீரியமும் அதிகமாக உள்ளது.

இந்த டெல்டா வகை கொரோனா முன்னர் உருமாற்றம் அடைந்த ஆல்பா வகை கொரோனாவை விட 55% ஆதிக பரவும் தன்மையை கொண்டது என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே கூறியது. இந்த டெல்டா வகையை தொடர்ந்து தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த டெல்டா பிளஸ் வகை கொரோனாவும் இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உலக சுகாதார அமைப்பின் நிறுவனர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது, “தற்போது உலகம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது எனவும். இதை தவிர்க்க முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கூட்டமான இடங்களுக்கு செல்லாமல் மக்கள் இருக்கவேண்டும். மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவ கருவிகளை உலக நாடுகளுக்கு சமமாக அளிக்க வேண்டும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here