உலக கோப்பை கிரிக்கெட் 2022 – போட்டி அட்டவணையை வெளியிட்ட ஐசிசி!!

0

பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டது. இப்போட்டி நியூஸிலாந்தில் நடைபெற உள்ளது.

பெண்களுக்கான உலக கோப்பை:

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் எந்த அளவிற்கு ரசிகர்கள் விரும்புகிறார்களோ அதே போல் பெண்களுக்கான கிரிக்கெட்டும் மிக பிரபலம். பெண்களுக்கான 12 வது உலக கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு 2021 அன்று நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியை 2022 ஆம் ஆண்டு தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி.

நியூஸிலாந்தில் உலக கோப்பை :

இந்நிலையில் பெண்களுக்கான 12 வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நியூஸிலாந்தில் வைத்து நடத்த திட்டமிட்டு உள்ளனர். இப்போட்டி 2022 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறும். போட்டிகளை நியூஸிலாந்தின் 6 நகரங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் தகுதி பெற்று உள்ளன.  மீதமுள்ள 3 அணிகள் தகுதிச் சுற்று மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதி சுற்றுக்கான போட்டி இலங்கையில் வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும்.

2022 ஆம் ஆண்டில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பைக்கான முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி தகுதி சுற்றின் மூலம் வரும் அணியை எதிர்கொள்கிறது. அதே போல் மார்ச் 6ஆம் தேதி இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் தகுதி சுற்றின் மூலம் வரும் மற்றொரு அணியுடன் மோத உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here