T20 உலக கோப்பைக்கான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு…, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா இந்த படை??

0
T20 உலக கோப்பைக்கான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..., சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா இந்த படை??
T20 உலக கோப்பைக்கான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..., சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா இந்த படை??

தென் ஆப்பிரிக்காவில் மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கு பெற உள்ளன. 2009 ஆம் ஆண்டு முதல் 7 சீசனை கடந்துள்ள, மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரில், அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியாக ஆஸ்திரேலிய அணி திகழ்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, ஆஸ்திரேலிய அணியானது, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், நடப்பு சாம்பியனாகவும் வலம் வருகிறது. இதனால், இந்திய மகளிர் அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த மாதத்தில் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் போட்டியிட்டது. இதனை தொடர்ந்து, வரும் 19ம் தேதி முதல் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முத்தரப்பு தொடரில் இந்திய மகளிர் அணி விளையாட உள்ளது.

3 கோல் வித்தியாசத்தில் வீழ்ந்த ஆக்ஸ்போர்டு…, கெத்து காட்டி வென்ற அர்செனல்!!

இதனால், எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரை ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், டி20 உலக கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான அணியை கடந்த முறை உலக கோப்பையை வென்ற மெக் லானிங் தலைமை தாங்க உள்ளார்.

T20 உலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி

மெக் லானிங் (சி), அலிசா ஹீலி (விசி), டார்சி பிரவுன், ஆஷ்லே கார்ட்னர், கிம் கார்த், ஹீதர் கிரஹாம், கிரேஸ் ஹாரிஸ், ஜெஸ் ஜோனாசென், அலனா கிங், தஹ்லியா மெக்ராத், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனாபெல் சதர்லேண்ட் ஜார்ஜியா வேர்ஹாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here