T20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு…, முழு விவரம் உள்ளே!!

0
T20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..., முழு விவரம் உள்ளே!!
T20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு..., முழு விவரம் உள்ளே!!

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் மகளிர் டி20 உலக கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியை ECB அறிவித்துள்ளது.

T20 உலக கோப்பை:

ஐசிசி சார்பாக மகளிருக்கான டி20 உலக கோப்பை தொடரின் 8 வது சீசன் தென் ஆப்பிரிக்காவில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், அயர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் இரு குரூப்களின் கீழ் தலா 5 அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தொடரில், இந்திய அணியானது, குரூப் Bயில் இங்கிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில், இந்திய அணி தனக்கான முதல் போட்டியில் பாகிஸ்தானை பிப்ரவரி 12ம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. இதனை தொடர்ந்து, 15, 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிக்கு எதிராக மோத உள்ளது. இந்த உலக கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐயானது கடந்த மாதமே அறிவித்த நிலையில் இங்கிலாந்து அணியை இன்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் (ECB) அறிவித்துள்ளது.

ஜெய் ஷாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர்!! ஆசிய கோப்பை குறித்த அப்டேட் வெளியிடு!!

இங்கிலாந்து T20 உலக கோப்பைக்கான மகளிர் அணி:

ஹீதெர் நைட் (கேப்டன்), லாரென் பெல், மியா பௌச்சியர், கேத்ரீன் ப்ரண்ட், ஆலிஸ் கேப்ஸி, கேட் கிராஸ், ஃப்ரேயா டேவிஸ், சார்லி டீன், சோபியா டன்க்லி, சோஃபி எக்லெஸ்டோன், சாரா க்ளென், எமி ஜோன்ஸ், நாட் வின்ஃபீல்ட், லாரன், லாரன் -ஹில், டேனி வியாட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here