IND VS ENG T20.., தொடரை வென்ற இங்கிலாந்து.., தோல்வியுடன் தாயகம் திரும்பும் இந்தியா!!

0
IND VS ENG T20.., தொடரை வென்ற இங்கிலாந்து.., தோல்வியுடன் தாயகம் திரும்பும் இந்தியா!!
IND VS ENG T20.., தொடரை வென்ற இங்கிலாந்து.., தோல்வியுடன் தாயகம் திரும்பும் இந்தியா!!

இந்திய பெண்கள் அணிக்கு எதிரான T20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி தொடரை வென்று அசத்தியுள்ளது.

இந்தியா VS இங்கிலாந்து

இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் நடைபெற்று வந்தது. அதன்படி முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து மூன்றாவது T20 ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்தது.

இதில் தீப்தி சர்மா(24), ரிச்சா கோஷ்(33), பூஜா வஸ்த்ரகர்(19) ஆகியோர் அதிக ரன்கள் குவித்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.2 ஓவர் முடிவில் 126 ரன்கள் குவித்தனர். இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு சோபியா டங்க்லி(49), ஆலிஸ் கேப்ஸி(38), டேனியல் வியாட்(22) ஆகியோர் அதிக ரன்கள் குவித்து உதவியாக இருந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2 – 1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்று அசத்தியது. இந்த வெற்றியை தொடர்ந்து இங்கிலாந்து அணி வரும் 18 ஆம் தேதி மீண்டும் ஒரு நாள் தொடரில் இந்தியாவை சந்திக்க உள்ளது. இதனால் இந்த தொடரிலாவது இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here