ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டும் பெண்கள் வரலாம் – தாலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அச்சம்!!

0
ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டும் பெண்கள் வரலாம் - தாலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அச்சம்!!
ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டும் பெண்கள் வரலாம் - தாலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அச்சம்!!

காபூல் மாநகராட்சியில் வேலை பார்த்த பெண்கள் இனி வேலைக்கு வர வேண்டாம் எனவும், ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டுமே இனி பெண்கள் வர வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிரடி உத்தரவு:

ஆப்கானை தாலிபான் தீவிரவாதிகள் அண்மையில் கைப்பற்றினர். அங்கு தற்காலிக அதிபரை கொண்டு ஆட்சி அமைத்துள்ள தாலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உணர்வுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும், உரிமைகளை நிலைநாட்டுவதாகவும் உறுதியளித்தனர். ஆனால், அதிகாரத்தை அமைத்த நாள் முதல் இதை அனைத்தையும் மறந்து பெண்கள் உரிமைகளை தட்டி பறிக்கும் செயலில் தாலிபான்கள் இறங்கியுள்ளனர். இது உலக நாடுகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டும் பெண்கள் வரலாம் - தாலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அச்சம்!!
ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டும் பெண்கள் வரலாம் – தாலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அச்சம்!!

முதலில், ஆப்கானின் அமைச்சரவையில் பெண்கள் நியமனம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, பெண்களால் குழந்தை மட்டும் தான் பெற்றுத்தர முடியுமே தவிர, பிற கடினமான பணிகளை செய்ய முடியாது. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். இதையடுத்து, பெண்கள் தங்களின் சக வகுப்பு மாணவர்களான ஆண் மாணவர்களுடன் சமமாக வகுப்பறையில் அமர்ந்து படிக்க அனுமதி இல்லை என அறிவித்தனர்.

ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டும் பெண்கள் வரலாம் - தாலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அச்சம்!!
ஆண்களால் முடியாத வேலையை செய்ய மட்டும் பெண்கள் வரலாம் – தாலிபான்களின் அறிவிப்பால் பெண்கள் அச்சம்!!

இந்த நிலையில், தற்போது காபூல் மாநகராட்சியில் பணிபுரியும் பெண்கள் இனிமேல் வேலைக்கு வர வேண்டாம் என அறிவித்துள்ளனர். அது போக, இனி ஆப்கானில் ஆண்களால் செய்ய முடியாத வேலையை செய்யும் பெண்கள் மட்டுமே பணிக்கு வர வேண்டும் எனவும், மற்ற பெண்கள் வேலைக்கு வர தேவையில்லை எனவும் அறிவித்தனர். இதனால், ஆப்கானில் இருக்க கூடிய கொஞ்ச நஞ்ச பெண்களின் உரிமைகளும் தற்போது ஒட்டுமொத்தமாக கேள்விக்குறியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here