இன்றைய காலகட்டத்தில் மக்களை நூதன முறையில் பண மோசடி செய்து வரும் நிலையில் தமிழக முதல்வர் வழங்கும் மகளிர் உரிமை தொகையை சைபர் கிரைம் குற்றவாளிகள் குறி வைக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்று சேலம், தருமபுரி மாவட்ட ஆட்சியர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மகளிர் உரிமை தொகையை தமிழக முதல்வர் இன்று தொடங்க இருக்கும் முன்பாகவே, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 தொகை வந்து சேரத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இல்லத்தரசிகளே மானிய விலையில் சிலிண்டர்…, அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மத்திய பிரதேசம்!!
இந்நிலையில், பணம் பெறும் பயனாளிகளின் வங்கிக் கணக்கை சைபர் கிரைம் குற்றவாளிகள் சிலர் குறிவைத்து பணம் பறிக்க முயற்சிக்க வாய்ப்புள்ளது. எனவே, பேங் தரப்பில் இருந்து யாரேனும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினாலோ அல்லது ‘ஓடிபி’ எண் கேட்டாலோ தர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.