ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொடர் போராட்டம் – தாலிபான்கள் இன்று வெளியிடும் முக்கிய அறிவிப்பு!!

0

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அங்கு புதிய அரசில் அங்கம் வகிப்பவர்கள் குறித்த அறிவிப்பை தாலிபான்கள் இன்று பிற்பகல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின் அந்நாட்டின் ஒட்டு மொத்த ஆட்சி பொறுப்பையும் தற்போது தாலிபான்கள் தன் வசம் படுத்திக்கொண்டனர். இதனால் அங்கு வாழும் மக்கள் குறிப்பாக பெண்கள் தங்களில் சுதந்திரம் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கோரி ஹெராத் நகரில் உள்ள ஆளுநர் மளிகை முன்பு ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தில் அங்கம் வகிப்பவர்கள் குறித்த அறிவிப்பு இன்று தாலிபான்களால் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே போர்கள் காரணமாக வலுவிழந்துள்ள பொருளாதாரத்தை வலுபடுத்தும் விதமாக புதிய அரசு அமையுமா என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. தாலிபான்களால் புதிதாக அமைய உள்ள அரசு அனைவருக்குமான அரசாக புதிய அரசு இருக்கும் என இதற்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here