தொடர்ந்து பெண்களை கவரும் தமிழக அரசு.. பேறுகால விடுப்பை 12 மாதங்களாக நீட்டித்து அரசாணை!!

0

பெண் அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பை தமிழக அரசு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்ததாக தற்போது மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொதுவாகவே அரசு பணியில் உள்ள மகளிருக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பேறுகால விடுப்பு கடந்த 2011ம் ஆண்டு 6 மாதத்தில் இருந்து, 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதமாக நீட்டிப்பு செய்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே நடந்து முடிந்த தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று மகளிர் பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதமாக உயர்த்துவது. எனவே பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக நிதி அமைச்சர் இந்த பேறுகால விடுப்பு 12 மாதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

அதை தொடர்ந்து தமிழக அரசு, மகளிர் பேறுகால விடுப்பை 9 மாதத்தில் இருந்து 12 மாதமாக உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டு உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here