“Work From Home” க்கு வேட்டு வைத்த பிரபல IT நிறுவனம்.,, ஊழியர்களுக்கு ஷாக்!!

0

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக உள்ள விப்ரோ, தங்கள் நிறுவன ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு அழைத்து உள்ளது.

Wipro நிறுவனம்:

கொரோனா வருகைக்கு பின், “வொர்க் ஃப்ரம் ஹோம்” என்ற சொல் மிகவும் பிரபலமான சொல்லாக மாறிவிட்டது. அதாவது உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்த போது, பல ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் முறை அமல்படுத்தப்பட்டது .மேலும் தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, ஒரு சில அரசு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வொர்க் ப்ரம் ஹோம் முறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தியிருந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து, உலகம் முழுவதும் இயல்புநிலைக்கு திரும்பியதை அடுத்து சமீபத்தில் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களும் மீண்டும் ஊழியர்களை தங்கள் அலுவலகங்களுக்கு வரவழைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட் – யப்பா.,எவ்ளோ நாள் கனவு இது? நிர்வாகம் எடுக்க போகும் அதிரடி முடிவு!!

இதன் அடிப்படையில், விப்ரோ நிறுவன ஊழியர்கள் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி என 4 நாட்களில் அலுவலகம் திறந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் 2 ஆண்டுகளாக வொர்க் ப்ரம் ஹோம் என்ற வசதியை அனுபவித்த ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு சற்று அதிர்ச்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here