இவர மாதிரி ஒரு வீரரை என் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது.., நியூசிலாந்து கேப்டன் ப்ளீச் பேட்டி!!

0
இவர மாதிரி ஒரு வீரரை என் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது.., நியூசிலாந்து கேப்டன் ப்ளீச் பேட்டி!!
இவர மாதிரி ஒரு வீரரை என் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது.., நியூசிலாந்து கேப்டன் ப்ளீச் பேட்டி!!

இந்திய வீரர் சூர்யகுமார் விளையாடிய ஆட்டத்தை நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பாராட்டி பேசியுள்ளார்.

சூர்யகுமார்:

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று 2 வது போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சூரியகுமார் மற்றும் இஷான் கிஷன் அதிரடியால் ஆறு விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 191 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணிக்கு இலக்கு நிர்ணயித்தனர். ஆனால் இந்த இலக்கை அடைய பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராடினார். ஆனாலும் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாததால் இவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இந்த போட்டியில் சூர்யகுமார் 111 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் அதிரடி காட்டினார்.

பிசிசிஐ இப்போ தான் சரியான முடிவை எடுத்துள்ளது…, பாகிஸ்தான் வீரர் கருத்து…, அப்படி என்னவா இருக்கும்!!

இந்நிலையில், சூர்யகுமாரை பாராட்டி நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இவரைப் போன்ற ஒரு சிறந்த ஆட்டக்காரரை என் வாழ்நாளில் பார்த்ததே கிடையாது. இவர் ஆடிய ஷாட்கள் அனைத்தும் வியப்பை ஏற்படுத்தியது. இவரை வீழ்த்துவதற்கு நாங்கள் கடுமையாக போராடியும் எங்களால் எதுவும் பண்ண முடியவில்லை. நாங்கள் தோல்வி அடைந்தாலும் இந்திய வீரர் சூர்யகுமார் விளையாடிய ஆட்டம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக நியூசிலாந்து கேப்டன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here