தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா?? அரசின் இறுதி கட்ட முடிவு என்ன?? முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
இது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த கோடை வெயிலின் தீவிரத்தை உணர்ந்து வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு மேல் பள்ளிகளை திறக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் மற்றும் வல்லுநர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். விரைவில் இதை அரசு பரிசீலனை செய்து முக்கிய முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here