தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!!!

0
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுத்தேர்வு

தமிழகத்தில் +1, +2 வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி முதல் தொடங்கிய நிலையில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தேர்வெழுத வரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் உள்ளிட்ட பலரிடமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் தேர்வுக்கு வராத மாணவர்கள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இந்த மாணவர்கள் இனி வரும் முக்கிய பாடத் தேர்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் மாணவர்களின் பெற்றோர்களின் உதவியும் தேவை என அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அவசியமா? என பலரும் புகார் தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “கொரோனா பரவலில் பொதுத்தேர்வு எழுதாமல் அனைவரையும் பாஸ் செய்ய வைத்துள்ளதால் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள அச்சப்படுகிறார்கள்.

IND VS AUS ODI., தொடக்க வீரராக களமிறங்குவது யார் தெரியுமா? ஹர்திக் பாண்டியா சொன்ன முக்கிய அப்டேட்!!!

இவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மறு வாய்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் +2 பொதுத்தேர்வில் 100% பாஸ் என்பதை வெளிப்படுத்த பல தனியார் பள்ளிகளிலும் 11ம் வகுப்பு பாடத் திட்டங்களை நடத்துவதில்லை. ஆனால் உயர் கல்விக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது 11ம் வகுப்பு பாடங்கள் தான். இதனால் 11ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வாய்ப்பே இல்லை.” என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here