திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமைய தாம்பத்ய உறவு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த உறவு சரியாக அமையாமல் சில கணவன் மனைவி விவாகரத்து வரை செல்கின்றனர். அந்த வகையில் திருமணம் முடிந்து 35 நாட்கள் கடந்தும் கணவனை பாலுறவுக்கு மனைவி அனுமதிப்பதில்லை என டெல்லி குடும்ப நல நீதிமன்றத்தில் கணவன் வழக்கு தொடர்ந்தார். இதன் பிறகு பெற்றோர் வீட்டுக்கு திரும்பிய மனைவி கணவன் வீட்டுக்கு வரவே இல்லை.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனை கருத்தில் கொண்டு இந்த திருமண ஜோடிகளுக்கு, நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனைவி மேல்முறையீட்டு மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “எந்த ஒரு காரணமும் இன்றி கணவனை பாலியல் உறவுக்கு அனுமதிக்காதது, மன ரீதியாக கொடுமை படுத்தும் செயல். எனவே விவாகரத்து வழங்கியது சரிதான்.” என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த துறைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு மசோதா., மத்திய அரசு இன்று தாக்கல்?