மனைவியை 12 வருடத்திற்கு மேல் வீட்டு சிறையில் வைத்த கணவன்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

0
மனைவியை 12 வருடத்திற்கு மேல் வீட்டு சிறையில் வைத்த கணவன்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்!!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் செய்திகளில் பார்க்கிறோம். இதற்காக காவல்துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும், குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் அவரது கணவரால் 12 ஆண்டுக்கு மேல் வீட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கர்நாடகாவில் உள்ள ஹிரேகே கிராமத்தை சேர்ந்த சன்னலையா என்பவருக்கும், அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஏற்கனவே இவருக்கு 2 மனைவிகள் விவாகரத்து வாங்கியதால் இந்தப் பெண்ணும் விவாகரத்து கேட்டு விடுவாரோ என்ற பயத்தில் 3 பூட்டுகள் போட்டு 12 ஆண்டுகளாக சிறை வைத்துள்ளார். இந்த கொடுமைகளை தாங்க இயலாமல் முதல் 2 மனைவிகள் கொடுத்த புகாரின் பேரில் கணவன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

மெட்ரோ பயணிகளே.., இனி இதை மட்டும் செய்யாதீங்க.., மீறினால் 5000 அபராதம் & சிறை தண்டனை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here