கணவருக்கு பிறகு ஓய்வூதிய தொகை மனைவிக்கு கிடைக்குமா?? EPFO நிறுவனம் அளித்த விளக்கம்!!!

0
கணவருக்கு பிறகு ஓய்வூதிய தொகை மனைவிக்கு கிடைக்குமா?? EPFO நிறுவனம் அளித்த விளக்கம்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் ஓய்வு பெறும் ஊழியர்களின் சம்பளத்தில் 12 சதவீதம் தொகையை பிடித்தம் செய்து PF நிதியில் டெபாசிட் செய்து வருகின்றனர். இந்த தொகையானது அவர்கள் ஓய்வு பெற்ற பின் ஓய்வு காலத்தில் பயன்படும் வகையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தனியார் மற்றும் அரசு துறைகளில் ஓய்வு பெறும் வயது 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஊழியர்கள் 58 வயதுக்கு பிறகு இந்த பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற நிபந்தனை உள்ளது.
இந்நிலையில் பணி ஓய்வுக்குப் பிறகு கணவர் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் இறந்து விட்டால் மனைவிக்கு PF பணம் கிடைக்குமா என்று சந்தேகம் இருந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து EPFO நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது ஊழியர்கள் ஓய்வூதியம் பெறும் போது இறந்து விட்டால் அவர்களது ஓய்வூதிய தொகையில் பாதி மனைவிக்கு வழங்கப்படுகிறது. ஒரு வேலை பணி ஓய்வுக்கும் முன் இருந்தால் இந்த தொகை மனைவிக்கு ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர விதவைகளுக்கான ஓய்வூதியத் தொகை ரூபாய் ஆயிரமும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here