கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் WWE பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டதன் காரணமாக “WRESTLEMANIA 36” நிகழ்ச்சியில் இருந்து கடைசி நேரத்தில் பிரபல ரெஸ்லிங் வீரர் ரோமன் ரெய்ன்ஸ் விலகி இருக்கிறார்..
பொறுப்பற்ற செயல்..!
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரெஸ்லிங் வீரர் “தி மிஸ்” உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் ரெஸ்லிங் போட்டிகளை ரசிகர்கள் இல்லாத அரங்கில் நடத்தி வரும் WWE உடல்நிலை சரியில்லாத ஒரு வீரரை போட்டியில் பங்கேற்க வைத்து அதிர்ச்சி அளித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பு – விலகிய ரோமன் ரெய்ன்ஸ்..!
ரெஸ்ஸில்மேனியா நிகழ்ச்சியில் சிறப்பு போட்டியாக ரோமன் ரெய்ன்ஸ் – கோல்ட்பெர்க் மோதும் போட்டி அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தப் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
இந்த நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொண்ட ரெஸ்ஸில்மேனியா போட்டியில் மட்டும் பங்கேற்று விட்டு அவர் போட்டிகளில் இருந்து சில காலம் விலகி ஓய்வு எடுக்க செல்வார் என கூறப்பட்ட நிலையில் WWE பொறுப்பற்று செய்த காரியத்தால் அவர் WRESTLEMANIA போட்டியில் இருந்தே விலகி இருக்கிறார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |