அதிமுக கட்சிக்கு சசிகலா யார் ? – கட்சிக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை – எடப்பாடி அறிவிப்பு!!

0
அதிமுக கட்சிக்கு சசிகலா யார் ? - கட்சிக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை - எடப்பாடி அறிவிப்பு!!
அதிமுக கட்சிக்கு சசிகலா யார் ? - கட்சிக்கும் அவருக்கும் சம்மந்தமில்லை - எடப்பாடி அறிவிப்பு!!

அதிமுக கட்சியை சின்னம்மா சசிகலா கைப்பற்றப்போவதாக சிலர் கூறி வந்தனர், சிறை தண்டனை முடிந்து வந்த பின் கட்சி தொண்டர்கள் மற்றும் சில பிரமுகர்களிடம் பேசி அவர்தான் கட்சியை இனி வழி நடத்த போவதாக தகவல்கள் வெளிவந்தன, ஆனால் இன்னும் அதைப்பற்றிய முழு விவரங்கள் எதுவும் தெரியவில்லை, இதைப்பற்றி இன்று அதிமுக கட்சியின் ஒருகிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அதிமுகவுக்கு சசிகலாவுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என் கூறியுள்ளார்.

சசிகலாவுக்கு அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை….

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் தலைவியாகவும் இருந்த செல்வி ஜெ. ஜெயலிலதா மறைவுக்கு பின் கட்சியை சின்னம்மா சசிகலா கைப்பற்ற தொடங்கினர். முதல்வர் பதவியில் இருந்த ஓ.பன்னிர்செல்வவ்த்தை ராஜினாமா செய்ய வைத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அமரவைத்தார், இச்செயலுக்கு ஓ.பன்னிர்செல்வம் அம்மா சமாதியில் தர்மயுத்தம் ஒன்று நடத்தினார். பின் எடபாடிக்கும் ஒபிஎஸ்க்கும் உள்கட்சி மோதல் ஏற்பட்டது, அதன் பின் சமரச பேர்ச்சுவார்தை நடத்தி எடப்பாடி முதல்வராகவும் ஓபிஎஸ் துணை முதல்வராகவும் பொறுப்புகளை பெற்றனர். பின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. சசிகலாவுக்கு பின் அதிமுகவை யார் வழி நடத்த போவது. யாருடைய தலைமையில் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்ற சந்தேகம் வந்தது பின் பொறுப்புகள் அனைத்தும் எடப்பாடி ஓபிஎஸிடம் சென்றன சசிகலாவை கழட்டிவிட்டனர்.

சசிகலாவுக்கு அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை....
சசிகலாவுக்கு அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமுமில்லை….

இதன் பின் கட்சியை சசிகலா சிறைத்தண்டனை முடிந்து வந்த பின் கைப்பற்ற போவதாக செய்திகள் கசிந்தன. அதேபோல் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்து, பின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு சண்டை ஏற்பட்டது பின் எடப்பாடி ஒருங்கிணைப்பாளராகவும் ஓபிஎஸ் துணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்ந்துடுக்கப்பட்டனர். இந்நிலையில் சசிகலாவிடம் கட்சியில் உள்ளவர்கள் சிலர் செல்போனில் தொடர்புகொண்டு பேசிய உரையாடல் வெளிவந்தது. சசிகலாவிடம் பேசிய கட்சியினரை கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து கட்சியில் இருந்தும் பொறுப்புகளில் இருந்தும் தூக்கினர். சசிகலாதன் கட்சியை கைப்பற்ற போகிறார் என கூறி வருகின்றனர் அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார் என்ற தகவல் கசிந்தன, இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் இதை பற்றி கேட்டதற்கு அவர் அதிமுக கட்சிக்கும் சசிகலாவுக்கும் எப்பொழுதும் எந்த ஒரு நிலையிலும் எந்த சம்மந்தமுமில்லை இது அதிகாரபூர்வ அறிவிப்பு என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here