ஊரடங்கு தளர்வுகள் பற்றி உலக நாடுகளுக்கு WHO சொன்ன புதிய அறிவுரை… 

0

உலக சுகாதார நிறுவனம், ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிப்பதில் உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை தொடங்கும்போது இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஊரடங்கை அறிவித்தது. தற்போது இரண்டாம் அலையின் பரவல் குறைந்து வரும் வேளையில் மக்களின் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே நிபுணர்கள் உருமாறிய கொரோனா வைரசால் மூன்றாம் அலை உலக நாடுகளை தாக்கக்கூடும் என்று எச்சரித்தனர். தென் ஆப்பிரிக்கா உட்பட சில உலக நாடுகள் அங்கு மூன்றாம் அலை தொடங்கிவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஒரு அறிவுரையை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், உலக நாடுகளுக்கு ஊரடங்கில் தளர்வுகளை அளிப்பதில் கவனத்துடன் செயல்படவேண்டும் என தற்போது அறிவுறுத்தியுள்ளது. மேலும் பெருந்தொற்று காலம் முடிந்துவிடவில்லை, கொரோனாவின் புதிய அலை சில மாதங்களில் தாக்கக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here