புதிய வகை கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவி இருக்கலாம் – WHO அதிர்ச்சி தகவல்!!

0
WHO Chief Scientist
WHO Chief Scientist

உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், இங்கிலாந்து போன்ற ஐரோப்பா நாடுகளில் வளர்சிதை மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் டிசம்பர் 31ம் தேதி வரை இங்கிலாந்திற்கு சர்வதேச விமான போக்குவரத்தை இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அந்த புதிய வைரஸ் ஏற்கனவே பல நாடுகளுக்கு பரவி இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளது.

கொரோனா வைரஸ்:

உலகம் முழுவதும் இதுவரை 77,716,439 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 1,708,936 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையில் அமெரிக்கா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரசால் உலக நாட்டுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. இது பழைய வைரஸை விட 70% அதிக வேகத்துடன் பரவுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

corona virus
corona virus

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின் படி, இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி, அர்ஜென்டினா மற்றும் சிலி உட்பட சுமார் 30 நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் திரிபு மிகவும் எளிதில் பரவுகிறது என்ற அச்சத்தின் மத்தியில் இங்கிலாந்துக்கு விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தடுப்பூசி அதன் பரவலை தடுக்குமா என்பது தெரியவில்லை.

இந்த புதிய கொரோனா பரவல் நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை. இருப்பினும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வளர்கிறது. வைரஸ் வேகமாக பரவினாலும் அதனை கட்டுப்படுத்த முடியும். இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு ஏற்கனவே மற்ற நாடுகளில் இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதிய வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஒன்றே என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here