என்னது.. இனி இந்த போன்களில் வாட்ஸ்அப் கிடையாதா?? – கவலையில் ஆண்ட்ராய்டு வாசிகள்!!

0

சாம்சங் கேலக்சி S2, சோனி எக்ஸ்பீரியா மிரோ, லெனோவா A820, ஐபோன் 6S, உள்ளிட்ட குறிப்பிட்ட சில போன்களில் நவம்பர் மாதம் முதல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது என்ற தகவல் வெளிவந்துள்ளது.

வாட்ஸ்அப்க்கு தடை:

மொபைல் போன்களில் அதிக வாடிக்கையாளர்களுக்கு பிடித்த ஒரு சமூக வலைத்தளம் வாட்ஸ்அப் என்பது நாம் அறிந்த ஒன்று.  இந்த வலைதளத்தால் வாட்ஸ்அப்பில் உள்ளவர்களிடம் குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம். அதோடு சேர்த்து அவர்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ இணைப்புகளில் இணையலாம்.

 Whatsapp புது அப்டேட் இதுவா???

குறிப்பிட்ட டாக்குமென்ட்கள் மற்றும் தகவல்களை இந்த செயலியின் வாயிலாக நாம் பரிமாறிக் கொள்ளலாம்.  இத்தகு சிறப்பம்சங்களை கொண்ட வாட்ஸ்அப் சேவையை இனி குறிப்பிட்ட சில மொபைல் போன் பயனர்களால் பயன்படுத்த முடியாது என்ற தகவல் வந்துள்ளது. அதாவது ஐபோன் 6S, சாம்சங் கேலக்சி S2, சோனி எக்ஸ்பீரியா மிரோ, லெனோவா A820 போன்ற குறிப்பிட்ட சில மொபைல் போன் பயனர்களால் வருகிற நவம்பர் மாதம் முதல் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்...
இது மட்டுமல்லாமல், சமீபத்திய அப்டேட்டில் ஆண்ட்ராய்டு 4.0.3 ice cream sandwich, மற்றும் ios 9, kai OS 2.5.0 உள்ளிட்ட  ஓ எஸ் அதாவது இயக்க அமைப்புகளிலும் இந்த சேவை தடை செய்யப்பட உள்ளது என்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  இந்த தகவல் வாட்ஸ்அப் தடை செய்யப்பட உள்ள ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here