
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்ஸ்டா, facebook, வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளத்தை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் இன்ஸ்டா, ஃபேஸ்புக்கை விட வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் மெட்டா நிறுவனம் பயனர்களை குஷிப்படுத்த அவ்வப்போது பல அதிரடியான அப்டேட்களை வெளியிட்டாலும் சில நேரங்களில் அதிர்ச்சியான தகவல்களையும் வெளியிட்டு வருகிறது.
தமிழக மக்களே., நாளை இந்த மாவட்டத்தில் கரண்ட் இருக்காது.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இந்நிலையில் இத்தனை நாள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை டெலிட் செய்து மீண்டும் பேக்கப் மூலம் அனைத்து தரவுகளையும் எடுக்க முடியும் என்ற சிறப்பு அம்சம் இருந்தது. ஆனால் தற்போது இதற்கும் மெட்டா நிறுவனம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது இதுவரை அன்லிமிடெட் பேக் அப் நடைமுறையில் இருந்த நிலையில் இனி 15 ஜிபி வரை மட்டுமே பேக் அப் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அம்சம் 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.