வாட்சப்பில் வந்த புதிய அசத்தலான அம்சம்…!வாட்சப் உரிமையாளர் மார்க் சக்கர்பெர்க் அறிவிப்பு!!!

0

பலரும் பயன்படுத்தும் ஒரு தகவல் பரிமாற்று சசெயலியாக இருப்பது வாட்சப் தான். அந்த வகையில் தற்போது வாட்சப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட் இன்று முதல் அறிமுகபடுத்தி உள்ளது. அதன்படி வாட்சப்பில்  ஒரே சமயத்தில் எட்டு பேருடன் வீடியோ கால் பேசிக் கொள்ளலாம்.

மக்கள் தங்களின் பல தகவல்களை பரிமாறி கொள்ள பெரிதும் பயன்படுத்துவது வாட்சப் தான். அந்த செயலி தொடங்கிய முதல் இன்று வரை மக்களை  கவர பல புது புது வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. முதலில் தகவல் பரிமாற்ற செயலியாக அறிமுகமாகி பின்னர், போன் பேசும் வசதி, வீடியோ கால் வசதி, பண பரிமாற்றம் வசதி என பல வசதிகளை கொண்டு வந்தது. இந்நிலையில் அடுத்ததாக ஒரு புதிய வசதியை தொடங்கி உள்ளது.

அதாவது அதில் இருக்கும் வீடியோ கால் வசதியில் புதிதாக சில அம்சங்களை இணைத்து உள்ளது. குரூப் வீடியோ காலின்  போது அதை ஏற்கவில்லை என்றாலும், அந்த கால் வெயிட்டிங்கில் இருக்கும். அதன் பின்னர் அந்த காலை எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். இதற்காக join கால் என்ற வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் இந்த வசதி மூலம் ஒரே தருணத்தில் 8 பேருடன் வீடியோ கால் பேச முடியும். மேலும் இடையே வெளியேறினாலும் சேர்த்து கொள்ளும் வசதியும்  கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. வாட்சப்பின்  இந்த புதிய அப்டேட்டை  அதன் உரிமையாளர்  மார்க் சக்கர்பெர்க்  அறிவித்து உள்ளார். மேலும் இந்த புதிய வசதி மூலம் பயனர்களின் பிரைவசி எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை அந்த நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here