வாட்ஸப் பயனர்களுக்கு அடித்த ஜாக்பாட் – இனி ஃபைல் அனுப்புறதுல பிரச்சனை இல்லை! அதிரடி அப்டேட்!!

0
வாட்ஸப் பயனர்களுக்கு அடித்த ஜாக்பாட் - இனி ஃபைல் அனுப்புறதுல பிரச்சனை இல்லை! அதிரடி அப்டேட்!!
வாட்ஸப் பயனர்களுக்கு அடித்த ஜாக்பாட் - இனி ஃபைல் அனுப்புறதுல பிரச்சனை இல்லை! அதிரடி அப்டேட்!!

மக்கள் அதிகம் பயன்படுத்தும், சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில், இனி 2 ஜிபி வரை ஃபைல்கள் அனுப்புவதற்கான அதிரடி அப்டேட் ஒன்றை, வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதிரடி அப்டேட்:

உலகெங்கிலும் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த செயலி மூலமாக, நாம் வாய்ஸ் மெசேஜ் , வீடியோ, போட்டோ, கோப்புகள் மற்றும் முக்கியமான டாக்குமென்ட்களை எளிதில் அனுப்ப முடியும். ஆனால்,கோப்புகள் குறிப்பிட்ட அளவுக்குள் இருந்தால் மட்டுமே இதனை வாட்ஸ் அப் வாயிலாக அனுப்ப முடியும் என்ற நிபந்தனை இருந்து வந்தது. இது போக, அந்த பைலை நாம் கட்டாயம் அனுப்ப வேண்டும் என்று நினைத்தால், அதற்கென்று உள்ள சில செயலிகளை பயன்படுத்தி, பைல் சைஸை குறைத்து, அதன் வாயிலாக மட்டுமே பைல்களை அனுப்ப முடியும்.

தற்போது இதில், மாற்றம் காணும் வகையில், வாட்ஸ் அப் வாயிலாக 2 ஜிபி அளவு வரை பைல்களை அனுப்பும் வழிமுறையை வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே, மெசேஜ்களுக்கு ரியாக்சன் செய்யும் அப்டேட் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த 2 ஜிபி அளவுள்ள கோப்புகளை அனுப்பும் வசதி பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான சோதனை முடிந்த பிறகு, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here