வாட்ஸ் அப் மெசேஜில் நடைமுறைக்கு வந்த புது அப்டேட் – முதற்கட்டமாக 6 எமோஜிகள் களமிறக்கம்! பயனர்கள் குஷி!!

0
Chat மட்டும் இல்லங்க.. இனி Shopping கூட வாட்ஸ் அப்பில் செய்யலாம் - வருகிறது அசர வைக்கும் அப்டேட்!
Chat மட்டும் இல்லங்க.. இனி Shopping கூட வாட்ஸ் அப்பில் செய்யலாம் - வருகிறது அசர வைக்கும் அப்டேட்!

சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில், மெசேஜ்க்கு எமோஜி மூலம் ரிப்ளை செய்யும் அதிரடி அப்டேட் அமலுக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக 6 எமோஜிகள் பயனர்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

அமலுக்கு வந்த அப்டேட்:

உலகம் முழுவதும், உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்று வாட்ஸ் அப். இந்த வாட்ஸ்அப் தளத்தில், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் போன்ற ஆப்களில் உள்ளது போல மெசேஜ்களுக்கு எமோஜி மூலம் பதிலளிக்கும் அம்சம் பயனர்களுக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. இது குறித்து பேசிய பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சத்தில், முதல் கட்டமாக லைக், ஹார்டின், ஆச்சரியம், சிரிப்பு, சோகம் மற்றும் நன்றி ஆகிய 6 எமோஜிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில், தேவையான எமோஜிகளை நாமே தேர்வு செய்து கொள்ளலாம். மெசேஜ்களுக்கு இந்த எமோஞ்சி மூலம் ரிப்ளை செய்ய, நாம் விரும்பும் மெசேஜை லாங் பிரெஸ் செய்தால், இந்த 6 எமோஞ்சிகள் தோன்றும். இதில் விரும்பியதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். விரைவில் கூடுதல் எமோஜிகளை, பயனர்களுக்கு கொடுக்க மெட்டா நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இது போக, ஸ்டேட்டஸ் களுக்கு இந்த எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் அம்சத்தை பயனர்களுக்கு கொடுக்க சோதனை நடந்து வருவதாகவும், இது போன்ற பல கூடுதல் அப்டேட்டுகள் மேலும் பயனர்களுக்கு வழங்கப்படலாம் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here