அப்டேட்களை வாரி வழங்கிய வாட்ஸ்அப் – இனி இதற்கு வாய்ப்பே இல்லை! மிரண்டு போன பயனர்கள்!!

0
அட்ராசக்க..வாட்ஸ் அப்பில் வந்துள்ள புது அம்சம்- இனி டென்ஷன் இல்லாமல் ஈஸியா Taxi Book செய்யலாம்!

மக்கள் அதிகம் பயன்படுத்தும், சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில், இதுவரை இல்லாத புத்தம் புதிய ஒரு மிரட்டல் அப்டேட்டை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அப்டேட்:

உலகின் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும், ஆப்களில் ஒன்று வாட்ஸ்அப். அந்த வகையில், இந்த Whatsapp நிறுவனம் நாள்தோறும் பயனர்களுக்கு புதுப்புது அப்டேட்டுகளை வாரி வழங்கி வருகிறது. சமீபத்தில், குறுந்தகவலை அழிக்கும் வசதி இரண்டரை நாட்கள் வரை நீட்டிக்க உள்ளதாக அறிவித்தது. தற்போது, பலரும் தாங்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிய மெசேஜை, வாட்ஸ் அப்பில் இருப்பதை அதாவது லாஸ்ட் சீன்  உள்ளிட்ட எல்லாவற்றையும்  மறைத்து வந்தார்கள்.

ஆனால், அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை, மறைக்கக் கூடிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. இதனை மாற்றும் விதமாக, இனி தாங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைக்கும் விதமாக ஒரு அப்டேட்டை  வாட்ஸ்அப் விரைவில் வெளியிட உள்ளது. இதன் மூலம், ஒருவரை கண்காணிக்கும் வாய்ப்பே இனி இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

மேலும், பயனர்கள் ஆன்லைனில் தாங்கள் இருப்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதையும் தாங்களே தேர்வு செய்து கொள்ளும் அம்சத்தையும் வாட்ஸ் அப் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பயனர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here