வாட்ஸ் ஆப்பில் வந்தாச்சு புது அப்டேட்.., உங்க நம்பர்  இனி  மிஸ்யூஸ்  ஆகாது.., அதுலயும்  இப்படி  ஒரு  ட்விஸ்ட் இருக்கு!!

0

உலகெங்கும் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் அப் தளத்தில், பயன்பாட்டில் இருக்கும் சிக்கலான ஒரு அப்டேட் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்டேட் :

உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். உலகின் எந்த மூலையில், உள்ள ஒரு நபருக்கும் இந்த ஆப் வாயிலாக நாம் தகவல்களை பரிமாற முடியும். அந்த வகையில் இந்த வாட்ஸ் அப் தளத்தில், பல்வேறு புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில், இந்த வாட்ஸ் அப் தளத்தில் கொடுக்கப்பட்ட ஒரு அப்டேட்டில் இருக்கும் சிக்கல், நன்மை குறித்த விவரம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது Community என்ற ஒரு ஆப்ஷன் புதிதாக வந்துள்ளது. வாட்ஸ் ஆப்பின் முகப்பு பக்கத்தில் இருக்கும் இந்த Community ஆப்சன் சில பயனர்களுக்கு கட்டப்படவில்லை. ஆனால், இந்த அப்டேட் இருக்கும் பயனர்கள், ஏதேனும் வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டால், மற்றவர்கள் அந்த குரூப்பில் இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தெரியாது. தனி நபர் மட்டுமே அந்த குரூப்பில் இருப்பது போன்று காட்டப்படுகிறது.

குரூப்பின் அட்மினுக்கு மட்டுமே, அந்தக் குழுவில் யார்? யார்? இருக்கிறார்கள் என்ற விவரம் தெரியும். மேலும் அட்மின் மட்டுமே மெசேஜ் செய்ய முடியும். இதனால் பயனர்கள் இந்த அப்டேட்டை பயன்படுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் பிசினஸ் சம்மந்தப்பட்ட செயலுக்கு மட்டுமே இது பொருந்துவது போல உள்ளது. மேலும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால், அடிமினுக்கு மட்டுமே குழுவில் இருப்பவர்களின் விவரம் தெரியும் என்பதால் மொபைல் எண் மிஸ்யூஸ் ஆவதற்கு வாய்ப்பு கிடையாது. இது பாதுகாப்பு நலன் கருதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here