வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்- பயனர்கள் குஷி!!

0

இந்திய நாட்டு மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் செயலி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது வாட்ஸ் ஆப். இந்த செயலி தற்போது ரசிகர்கள் குஷி அடையும் வகையில் புதிய அப்டேட் குறித்து அறிவித்துள்ளது.

வாட்ஸ் ஆப் :

தகவல் பரிமாற்றத்திற்காக இந்திய நாட்டில் பெரிய அளவிலான மக்கள் வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலில் மூலம் பயனாளர்கள் புகைப்படம், வீடியோ போன்றவற்றினை பகிர்ந்து வருவர் மேலும் அவ்வப்போது வாட்ஸ் அப் நிறுவனம் பயனாளர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் புதிய அப்டேட் குறித்த தகவலை அறிவித்து வரும்.

தற்போது அந்த வகையில் புதிய மூன்று அப்டேட் குறித்து அறிவித்துள்ளது. அதன்படி பயனாளர்கள் Disappearing Mode என்னும் ஆப்ஷனை பயன்படுத்தினால் 7 நாட்களுக்கு பின்பு அவர்கள் அனுப்பிய செய்தி அனைத்தும் தானாகவே அழிந்து விடும். இரண்டாவது அப்டேட் என்னவென்றால் View Once என்னும் ஆப்சன். இந்த ஆப்ஷனை பயன்படுத்தினால் பயனாளர்கள் பிறருக்கு போட்டோ, விடியோவை அனுப்பினால் அதனை அவர்கள் பார்த்த அடுத்த நொடி அந்த செய்தி அழிந்து விடும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மூன்றாவது அப்டேட் என்னவென்றால் பயனாளர்கள்  தங்களது போன் நம்பர் மூலம் வாட்ஸ் ஆப்பில் கணக்கு தொடங்கப்பட்டால் அதனை பல சாதனங்களில் பயன்படுத்த முடியும் என்பதே. தற்போது இந்த மூன்று அம்சங்களும் பயனாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here