Friday, March 29, 2024

நாளை முதல் வாட்ஸ்அப் இந்த மொபைல் மாடல்களில் செயல்படாது – பயனர்கள் ஷாக்!!

Must Read

வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் சில ஐபோன்கள் மற்றும் சில வித ஆண்ட்ராய்டு மொபைல் மாடல்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த ஆண்ட்ராய்டு வெர்சனில் உங்கள் வாட்ஸ்அப் இயங்குகிறது என்பதனை செட்டிங்ஸ் விருப்பத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலி:

கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மக்கள் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் செயலி என்றால் அது, வாட்ஸ்அப் தான். இந்த நிறுவனம் தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், சில ஐபோன்கள் மற்றும் சில வித ஆண்ட்ராய்டு மொபைல் மாடல்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என்பதே ஆகும். இது வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அண்ட்ராய்டு 4.0.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது புதிய மற்றும் iOS 9 இல் இயங்கும் ஐபோன்களில் மட்டுமே வாட்ஸ்அப் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பழைய அப்பேரடிங் சிஸ்டங்களை நீக்கியதே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மேலும் 5 பேருக்கு புதிய வகை கொரோனா – அச்சத்தில் மக்கள்!!

நாளை முதல் இது அமல்படுத்தப்பட உள்ளது. HTC Sensation, Google Nexus S, Sony Ericsson Xperia Arc, LG Optimus 2X, Samsung Galaxy S I9000, HTC Desire, Motorola Droid Razr மற்றும் Samsung Galaxy S2 இந்த மாடல் போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தொடர் வெற்றியை எதிர்நோக்கி RCB.., பலம் வாய்ந்த கொல்கத்தா அணிக்கு எதிராக இன்று பலப்பரீட்சை!!

இந்திய ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த, ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இத்தொடரின் 10வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -