வாட்ஸ் ஆப் புதிய கொள்கை – பயனர்கள் அனுமதிக்காவிட்டால் மெசேஜ்கள் நிறுத்தம்!!

0

பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்அப்பை, இந்தியாவில் மட்டும் சுமார் 53 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தனது சேவை விதிகள், தனியுரிமை கொள்கையை மாற்றம் செய்வதாக வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.

தனியுரிமைக் கொள்கை காலக்கெடுவை:

பயனாளர்களின் தகவல்களை தாய் நிறுவனமான ஃபேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், புதிய விதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வகுத்துள்ளது. எனினும் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய விதிகளை பயனாளர்கள் ஏற்பதற்கு பிப்ரவரி 8ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மே 15-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையை அதன் பயனாளர்கள் சனிக்கிழமைக்குள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பயனாளர்கள் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் அவர்களது கணக்கு நீக்கப்படாது என்றும், ஆனால் படிப்படியாக சேவைகள் குறைக்கப்படும் எனவும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தனியுரிமைக் கொள்கையை ஏற்கும்படி பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து நினைவூட்டல்களை அனுப்பும். அதன்பிறகும் புதிய விதிகளை ஏற்காவிடில், ஒரு கட்டத்தில் பயனாளர்களால் சாட் லிஸ்டை பயன்படுத்த முடியாது. அழைப்புகள், வீடியோ அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியும். மிஸ்டு கால் அல்லது வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க இயலும்.

சில வாரங்கள் அவகாசத்துக்கு பிறகும் தனியுரிமை கொள்கையை பயனாளர்கள் ஏற்காமல் இருந்தால், அவருக்கு அழைப்புகள், நோட்டிபிகேஷன்கள் வராது. கடைசியாக பயனாளர்களுக்கு வரும் மெசேஜ்கள் மற்றும் அழைப்புகளை வாட்ஸ்அப் நிறுவனம் நிறுத்தி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here