WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி…, இனி எத்தனை அக்கௌன்ட் வேண்டுமானாலும் வச்சுக்கலாமா??

0
WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி..., இனி எத்தனை அக்கௌன்ட் வேண்டுமானாலும் வச்சுக்கலாமா??
WHATSAPP-பில் அறிமுகமாகும் புதிய வசதி..., இனி எத்தனை அக்கௌன்ட் வேண்டுமானாலும் வச்சுக்கலாமா??

இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளமானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இதில், வாட்ஸ்அப் என்ற தளமானது ஒருவருக்கு ஒருவர் உடனுக்குடன் தகவல்களை பரிமாறி கொள்ளும் முன்னணி தளமாக உள்ளது. இதனால், இந்த அப்பின் பயனாளர்களின் எண்ணிக்கையும் அதிகம். மேலும், இந்த எண்ணிக்கையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன், புது புது அப்டேட்களையும் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த வகையில், தற்போது ஒருவர் தனது வாட்ஸ்அப்பில் கூடுதல் கணக்குகளைச் சேர்க்க கூடிய வசதியை இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 2.23.17.8 அப்டேட்டிற்கான சமீபத்திய வாட்ஸ் அப்பில் இந்த வசதி உள்ளதாக, வாட்ஸ்அப்பை கண்காணிக்கும் வலைத்தளமான WABetaInfo தெரிவித்துள்ளது. இதன்படி, QR குறியீடு பட்டனுக்கு அடுத்துள்ள அம்புக்குறி ஐகானைத் தொடுவதன் மூலம் புதிய கணக்கை வாட்ஸ் அப்பில் சேர்க்க முடியும். அதே மெனுவில், வேறு கணக்கிற்கு மாறுவதும் சாத்தியமாகும். நீங்கள் ஒரு புதிய கணக்கை வாட்ஸ்அப்பில் சேர்க்கும்போது, ஏற்கனவே உள்ள கணக்கில் இருந்து வெளியேற முடிவு செய்யும் வரை அது உங்கள் சாதனத்தில் இருக்கும் என WABetaInfo தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் விடப்பட்ட தொடர் விடுமுறை.., அதனால் ஏற்பட்ட சிக்கல்.., தவிக்கும் சாமானிய மக்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here