வாட்ஸ்அப் நிறுவனம் தந்திர வேலைகளில் ஈடுபடுகிறது.. மத்திய அரசு புகார்!!!

0

சமூக வலைத்தளமான வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது புதிய கொள்கைகளை பயனாளர்களை ஏற்க செய்ய தந்திரமான வேலைகள் செய்வதாக மத்திய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தற்போது  பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஒன்றிய அரசு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இந்த பிராமண பத்திரத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில் வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது கொள்கைகளை பயனாளர்கள் ஏற்கும்படி செய்ய பலவிதமான தந்திர வேலைகளில் ஈடுபடுவதாக புகார் அளித்துள்ளது.

மத்திய அரசின் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பாக வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது புதிய கொள்கைகளை ஏற்க செய்யும் வகையில் இவ்வாறு செயல்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய தனிநபர் கொள்கையானது இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டங்களுக்கும்,விதிகளுக்கும் எதிரானது.எனவே,அந்த கொள்கையை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் அந்த செயலியை பயன்படுத்தும் பயனாளிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here