வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு – உங்களுக்கு 25 லட்சம் லாட்டரி அடிச்சிருக்கு! நூதன முறை திருட்டு!!

0
வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு - உங்களுக்கு 25 லட்சம் லாட்டரி அடிச்சிருக்கு! நூதன முறை திருட்டு!!
வாட்ஸ்ஆப் பயனாளிகள் கவனத்திற்கு - உங்களுக்கு 25 லட்சம் லாட்டரி அடிச்சிருக்கு! நூதன முறை திருட்டு!!

பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ்அப் தளத்தில், நடக்கும் நூதன திருட்டு குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

 நூதன திருட்டு :

உலகெங்கிலும் உள்ள பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலை தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இதன் மூலம், எந்த ஒரு நபருக்கும் நாம் நினைத்த தகவல்களை நினைத்த நேரத்தில் பரிமாறிக் கொள்ள முடியும். இந்நிலையில், கடந்த சில தினங்களாக வாட்ஸ்அப் தளத்தில் நூதன திருட்டு ஒன்று நடைபெற்று வருகிறது. வாட்ஸ்அப் பயனர்களுக்கு +92 306 037 3744 என்ற எண்ணில் இருந்து, லாட்டரி சீட்டு குறித்த மெசேஜும், குரல் பதிவும் அனுப்பப்படுகிறது.

இந்த மெசேஜில் உங்களுக்கு 25 லட்சம் லாட்டரி அடித்துள்ளதாகவும், அந்தப் பணம் உங்களுடைய கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 07666533352 என்ற இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. நாம் இதனை செய்த சிலமணி நேரத்திலேயே நம்முடைய வாட்ஸ்அப் கணக்கு  ஹேக்கர்களால் முடக்கப்பட்டு, வங்கி கணக்கில் இருக்கும் பணம் திருடப்படுகிறது.

வாட்ஸ் அப்பில் உதயமாகும் சூப்பர் அப்டேட் - இனி தப்பிக்க இதை பண்ணலாம்! குஷியில் பயனர்கள்!!

பொதுமக்கள், இதிலிருந்து தப்புவதற்காக தெரியாத எண்ணில் இருந்து வரும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அந்த எண்ணை உடனடியாக முடக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும், அலைபேசிக்கு வரும் ஓடிபி எண்ணை யாருக்கும் பகிர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here