WhatsAppல் துஷ்பிரயோகமாக பயன்படுத்திய 2.9 மில்லியன் கணக்குகள் முடக்கம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!

0
WhatsAppல் துஷ்பிரயோகமாக பயன்படுத்திய 2.9 மில்லியன் கணக்குகள் முடக்கம் - வெளியான ஷாக்கிங் நியூஸ்!
WhatsAppல் துஷ்பிரயோகமாக பயன்படுத்திய 2.9 மில்லியன் கணக்குகள் முடக்கம் - வெளியான ஷாக்கிங் நியூஸ்!

WhatsApp செயலியை உலகம் முழுவதும் பல பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருவதால் இச்செயலியில் தனி நபரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 2.9 மில்லியன் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சமூக செய்தி தளத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

WhatsApp

உலகம் முழுவதும் WhatsApp செயலியை மில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனாளிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதுப்புது அம்சங்களை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அத்துடன் தனிநபரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பல்வேறு திருத்தங்களை இந்நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – திருவள்ளுவர் சிலையை காண மார்ச் 6 முதல் அனுமதி!

அந்த வகையில், இது தொடர்பாக சமூக செய்தி தளத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, WhatsApp செயலியில் கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு, அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் தரவு விஞ்ஞானிகள், நிபுணர்கள் என பாதுகாப்பை மேம்படுத்த முதலீடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து, 2023ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் மட்டும் தவறாக பயன்படுத்தப்பட்ட 2.9 மில்லியன் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பயனாளர்களிடம் பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் குறைதீர்ப்பு சேனல் பயன்படுத்தப்படுவதாக கூறியுள்ளார் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here