இந்தியாவில் 30 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம் – என்ன காரணம் தெரியுமா??

0

பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்அப் நிறுவனம் ஜூன் 16 முதல் ஜூலை 31 ஆம் தேதிக்குள் கிட்டத்தட்ட 3 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்துள்ளது.

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய ஐடி கொள்கையை அறிவித்தது. இந்த புதிய கொள்கைகளுக்கு ஏற்றப்படி கூகுள், வாட்ஸ்அப் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்ள 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும் வாட்ஸ்அப், பேஸ்புக் நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் இந்த விதிகளுக்கு ஒப்புதல் தெரிவித்தன.

Whatsapp புது அப்டேட் இதுவா???

இந்த புதிய ஐடி விதிகளின் கீழ் பயனாளர்களின் புகார்களின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை டிஜிட்டல் நிறுவனங்கள் மாதம் ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் ஜூன் 16 முதல் ஜூலை 31 வரையிலான 46 நாள் காலகட்டத்தில் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளின் விவரங்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

 வாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட்...

அதன்படி, 3 மில்லியன் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்திய அரசு அறிவித்த ஐடி விதிகள் 2021இன் படி வாட்ஸ்அப் சமர்ப்பிக்கும் இரண்டாவது அறிக்கை இதுவாகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here