வாட்ஸ் அப்பில் அமலுக்கு வந்தது சூப்பர் அப்டேட் – இனி எந்த கவலையும் இல்லை! குஷியில் பயனர்கள்!!

0
பயனர்களுக்கு செக் வைத்த வாட்ஸ்அப் - இனி இதற்கு வழியே இல்லை., ஷாக்கிங் அப்டேட்!!

வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பிய மெசேஜை குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிட் செய்யும் வசதி ஏற்கனவே இருந்து வரும் நிலையில், தற்போது அந்த நேரத்தை அதிகப்படுத்துவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

சூப்பர் அப்டேட்:

உலகெங்கிலும் உள்ள மக்கள்  அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப். இந்த செயலி வாயிலாக, எந்த மூலையில் உள்ள ஒருவருக்கும் நம்மால் தகவல்களை அனுப்ப முடியும். இந்த வாட்ஸ் அப்பில் கடந்த சில மாதங்களாக, பல புதிய அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நாம் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி, அதாவது delete for everyone என்ற ஆப்ஷன் இதற்கு முன்  1 மணி நேரம் 8 நிமிடம் 16 நொடிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது. தற்போது, இந்த நேரத்தை 2 நாட்கள் மற்றும் 12 மணி நேரம் என அதிகப்படுத்த வாட்ஸ்அப் அண்மையில் முடிவு செய்தது.

முதற்கட்டமாக, இந்த அப்டேட்  2.22.17.12 என்ற வெர்ஷன் மொபைல்களுக்கு  பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அமலுக்கு வந்துள்ள இந்த புதிய அப்டேட்டை, பயனர்கள் கொண்டாடி வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த, வெர்ஷன் மொபைல்களுக்கும் இந்த அப்டேட் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here