கெத்து காட்டிய ட்விட்டர் – வாட்ஸ் ஆப், இன்ஸ்டா கதறல்!!

0

சமூகவலைத்தள செயலிகளில் நேற்று ட்விட்டர் செயலி கெத்து காட்டி அசத்தியது. தற்போது இதனை கொண்டாடும் வகையில் #thankyoutwitter என்னும் ஹாஷ்டேக் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சமூகவலைத்தளம்:

தற்போதைய காலங்களில் உலகை இயக்கி வருவதே சமூகவலைத்தளம் தான். ஏனெனில் அனைத்து தகவல் மற்றும் தகவல் பரிமாற்றம் இதன் மூலம் தான் நடைபெற்று வருகிறது. அதில் முக்கிய பங்கு வகிக்கும் செயலி தான் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய செயலி. இவை அனைத்தும் அதிக அளவில் பயனாளர்களை கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய மூன்று செயலிகளும் ஒரே நிறுவனத்தின் கீழ் தான் செயல்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் ஆகிய செயலி சில கோளாறு காரணமாக சுமார் 45 நிமிடத்திற்கும் மேலாக இயங்கவில்லை. இதனால் பல பயனாளர்கள் தங்களது போன் தான் பிரச்னை என்று போனை ஆப் செய்து ஆப் செய்து ஆன் செய்தனர். பின்பு தான் தெரிந்தது இந்த மூன்று செயலியும் இயங்கவில்லை என்று. இதனால் பல பயனாளர்கள் தவித்து வந்தனர்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

ஆனால் அந்த நேரத்தில் ட்விட்டர் செயலி மட்டும் கெத்தாக இயங்கி வந்தது. இதனால் ட்விட்டர் செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் மிக குஷியாக இருந்து வந்தனர். மேலும் இதுகுறித்து ட்விட்டரில் பல ஹேஸ்டேக் வைரலாகி வந்தது. ட்விட்டர் செயலி சிறப்பாக நேற்று இயங்கியதால் #thankyoutwitter என்னும் ஹேஸ்டேக் நேற்று ட்ரெண்ட் ஆனது. அதேபோல் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் செயலி குறித்து #whatsappdown, #facebookdown மற்றும் #instagramdown என்னும் ஹேஸ்டேக் நேற்று முதல் தற்போது வரை ட்ரெண்ட் அகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here