ஸ்மார்ட் போன் திருடு போனால் அல்லது தொலைந்தால் என்ன என்ன செய்ய வேண்டும்??

0
ஸ்மார்ட் போன் திருடு போனால் அல்லது தொலைந்தால் என்ன என்ன செய்ய வேண்டும்??
ஸ்மார்ட் போன் திருடு போனால் அல்லது தொலைந்தால் என்ன என்ன செய்ய வேண்டும்??

உலகம் ஸ்மார்ட்போனை நோக்கிதான் செல்கிறது. அந்த அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்துள்ளது. ஸ்மார்போனின் பயன்பாடுகளும் அதிகரித்து விட்டன, இந்த ஸ்மார்போனால் பல நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது. இந்நிலையில் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அல்லது திருடு போய்விட்டாள் என்ன என்ன பண்ண வேண்டும் என்று முக்கியமான சில விஷயங்கள் உள்ளன.

ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண்ண வேண்டியவை…

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் என்பது அத்தியாவசியமாக மாறிவிட்டது. அதேபோல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயனப்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட்போனின் பயன்பாடுகள் முன்னதை விட இப்பொழுது அதிகம் ஆகிவிட்டன. ஸ்மார்ட்போனை எப்பொழுதும் கையிலேயே வைத்துக்கொண்டு சுற்றுவார்கள் பலர் உண்டு, சிலர் கழிவறை வரைக்கும் எடுத்தும் செல்வார்கள், சிலர் சார்ஜ் போடும்போதுகூட மொபைல்போனை கையிலேயே வைத்திருப்பார்கள். ஒரு சிலர் தங்களது பெர்சனல் மற்றும் அலுவலக பரிமாற்றம் மற்றும் வங்கி சம்மந்தப்பட்டவை என பலவற்றை மொபைலில் சேமித்து வைத்திருப்பார்கள். அப்படி உபயோகிக்கும் சிலர் அவர்களது போன் காணாமல் போனால் அல்லது தொலைந்தால் என செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அதுமட்டுமில்லாமல் இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். போன் காணாமல் போய்விட்டதே என்று சாதாரணமாக இருக்கக்கூடாது அதனால் பல விளைவுகளை சந்திக்க நேரிடலாம். திருடியவர்கள் பல பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம். எனவே ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நண்பர்கள் யாரேனும் உங்களது பபோனை தொலைத்திவிட்டால் அல்லது திருடு போய் விட்டால் உடனடியாக செய்ய வேண்டியவை என்னவென்றால்

ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண்ண வேண்டியவை...
ஸ்மார்ட்போன் தொலைந்தால் பண்ண வேண்டியவை…

1. நீங்கள் பயன்படுத்தும் மொபைல் நிறுவனத்திற்கு கால் செய்து உங்கள் சிம் நிலைபற்றி கூறி உடனடியாக துண்டிக்க வேண்டும்.
2. இண்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் போன்ற வங்கி சேவைகளை துண்டிக்க உரிய வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் upi பேமண்ட் போன்ற Paytm, Google Pay, phone pe போன்றவற்றை உடனே நிறுத்தம் செய்ய வேண்டும்.
3. தங்களது அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று மொபைல் திருட்டு பற்றி புகார அளித்து ஒரு FIR காப்பி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்
4. தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கிக்கு சென்று வங்கிக் கணக்குடன் இணைத்த செல்போன் எண்ணை மாற்ற வேண்டும்.
5. ஆதார் மையத்திற்கு சென்று உங்கள் செல்போன் எண்ணை மாற்ற வேண்டும்.
6. இமெயில், சமூக வலைத்தளங்களின் குறியிட்டுகாளை உடனடியாக மற்ற வேண்டும். இங்கு கூறியுள்ள அனைத்தும் அவசியம் பின்பற்ற வேண்டியவைகள் எனவே தவறாமல் பின்பற்றி வரும் பக்க விளைவுகளை தடுத்து கொள்ளுங்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here