10 ருபாய் நாணயத்தால் அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்.., ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை என்ன?

0

நாடு முழுவதும் வங்கிகள், பேருந்துகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

நாணயங்கள் வாங்க மறுப்பு:

நாட்டில், பேருந்துகள், மளிகைக்கடைகள் என பெரும்பாலான இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி, 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை அரசால் அங்கீகரிக்கப்பட்டவை என பல முறை அறிவிப்பு வெளியிட்டும், பல இடங்களில் இந்த நிலை நீடித்து வருகிறது. இதற்கிடையே 10 ரூபாய் நாணயங்கள் செல்லத்தக்கவை என்பதையும் அவற்றை மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி கடுமையான முறையில் மீண்டும் ஒரு முறை அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் தனியார் பேருந்துகள், நிறுவனங்களில் தான் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கிறார்கள் என்றால் அரசு அலுவலகங்கள், அரசுப் பேருந்துகள், என அரசு நிறுவனங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க முன்வருவதில்லை. இதற்கு முக்கிய காரணம் 10 ரூபாய் நாணயத்தை பற்றிய அறியாமை தான். 10 ரூபாய் நாணயம் செல்லும் என பல முறை அறிவிப்புகள் வெளியிட்டும் அது இன்னும் பரவலாக மக்கள் மத்தியில் சென்று சேர்வதில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கோவை மாவட்டத்தில் இந்தப் பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது. இதனால் தான் கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. இதேபோல் 10 ரூபாய் நாணயத்தை மையமாக வைத்து வலம் வரும் வதந்திகளுக்கும் ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here