பள்ளிகள் திறப்பு இந்த தேதியில் தான்.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
பள்ளிகள் திறப்பு இந்த தேதியில் தான்.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!
பள்ளிகள் திறப்பு இந்த தேதியில் தான்.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த வெப்ப அலையால் கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், ஒடிசா, கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து, வெயிலின் தாக்கத்தை பொறுத்து ஜூன் முதல் அல்லது 2வது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில், மேற்கு வங்கம் மாநிலம் புதிய கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய அப்டேட்-டை வெளியிட்டுள்ளது. அதாவது, கடுமையான வெப்பம் காரணமாக மேற்கு வங்கத்தில் உள்ள பள்ளிகளில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி முதலே வகுப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஆனால், இடையிடையே ஆண்டு இறுதித் தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு மே 2ம் தேதி முதல் கோடை விடுமுறையை அரசு அறிவித்தது.

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

மே மாதம் (31) இன்றுடன் முடிவடைய உள்ளதால், ஜூன் முதல் வாரத்திலேயே புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என மேற்கு வங்க பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும், ஆரம்ப நிலை வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 7ம் தேதியும் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here