பொதுவாக மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக அரசு சார்பில் பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி நலத்திட்டங்கள் வழங்க தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் நேற்று எஸ்எஸ்எஸ் ஜெயின் மகளிர் கல்லூரியில் விழா நடந்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது இந்த நிகழ்ச்சியை ரவுண்ட் டேபிள் இந்தியா சமூக அமைப்பு மற்றும் ராஜஸ்தான் காஸ்மோ மேக்னம் கிளப் இணைந்து நடத்தியுள்ளது. மேலும் அதில் 50 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் 10 பேருக்கு சக்கர நாற்காலி, 12 பேருக்கு மூன்று சக்கர மிதிவண்டி, 28 பேருக்கு மின் தையல் இயந்திரம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக மாணவர்களே., காலாண்டு தேர்வில் திடீர் மாற்றம்.., கல்வித்துறை கொடுத்த முக்கிய அறிவிப்பு!!