லேசா லேசா…தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!

0
லேசா லேசா...தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!
லேசா லேசா...தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!

தமிழகத்தில் தற்போது பெரும்பான்மையான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், பெரும்பாலான இடங்களில் கோடைக்காலத்தின் தாக்கம் மெதுமெதுவாக ஆரம்பமாகிவிட்டது. இந்த நிலையில் இன்று முதல் 6ம் தேதி வரையிலான வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

WhatsAppல் துஷ்பிரயோகமாக பயன்படுத்திய 2.9 மில்லியன் கணக்குகள் முடக்கம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!

இதில், இன்று முதல் வருகிற மார்ச் 3,6ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கையில், மார்ச் 4,5ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

அத்துடன் மீனவர்களுக்கான எச்சரிக்கையில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் வருகிற மார்ச் 4,5ம் தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here