இனி வரும் 4 நாட்களுக்கு தமிழக மக்கள் பாதுகாப்பா இருக்கணும் – கனமழை எச்சரிக்கை!!

0
இனி வரும் 4 நாட்களுக்கு தமிழக மக்கள் பாதுகாப்பா இருக்கணும் - கனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு அதாவது 12 செப்டம்பர் 2021 வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழகத்தில் சில வாரங்களாகவே பல மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இனி வரும் 4 நாட்களுக்கு தமிழக மக்கள் பாதுகாப்பா இருக்கணும் - கனமழை எச்சரிக்கை!!
இனி வரும் 4 நாட்களுக்கு தமிழக மக்கள் பாதுகாப்பா இருக்கணும் – கனமழை எச்சரிக்கை!!

குறிப்பாக செப்டம்பர் 12ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி வரும் 4 நாட்களுக்கு தமிழக மக்கள் பாதுகாப்பா இருக்கணும் - கனமழை எச்சரிக்கை!!
இனி வரும் 4 நாட்களுக்கு தமிழக மக்கள் பாதுகாப்பா இருக்கணும் – கனமழை எச்சரிக்கை!!

அதன்படி மேற்குறிப்பிட்ட தேதிகளில் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ள பட்டுள்ளார்கள்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here