அடுத்த சில நாட்களுக்கு தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..!வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!!

0
மக்களே வெளியே வராதீங்க.. 12 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - மக்கள் பரிதவிப்பு!

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது வெப்ப சலனம் காரணமாக மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையை அறிவித்து  உள்ளது. அதன்படி அடுத்து சில நாட்களுக்கு தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உட்பட பத்து மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை அதாவது ஜூலை 7ஆம், தர்மபுரி, நாமக்கல், சேலம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும், மற்ற பிற மாவட்டங்கள், புதுவை, காரைக்கால்  பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும் எனவும் தெரிவித்து உள்ளது.

அதே போல் நாளை மறுநாள் அதாவது ஜூலை 8ஆம் தேதி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை  மாவட்டங்களில் ஒரு சில  பகுதிகளில்  இடி கூடிய கனமழைக்கும், பிற மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது. மேலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் ஜூலை 9 மற்றும் 10 ஆம் தேதிகளில்   இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை சென்னையில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நாட்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் ஜூலை 8 முதல் 10ஆம் தேதி வரை அரபிக்கடல், தென்மேற்கு, மத்திய மேற்கு ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here