
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட குறைந்த அளவே பதிவாகி இருந்தது. இதன்பின் காலை நேரங்களில் மூடுபனி, மதிய வேளையில் கொளுத்தும் வெயில் என மோசமான வானிலையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டலத்தின் கீழடுக்கு பகுதியில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (மார்ச் 13) மற்றும் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல் மார்ச் 15 முதல் 17ம் தேதி வரை கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விக்ரம்லா சீக்கிரம் செத்துருவாரு…, திரிஷா தான் என்னோட Wife.., ஷாக்கிங் நியூஸை வெளியிட்ட யூடுப்பர்!!
மேலும் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 22-23 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என்றும் கூறியுள்ளனர்.