உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – தமிழகத்திற்கு ஆபத்தா??

0

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வங்க கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழக தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, கேரளா, கர்நாடகா கடலோர பகுதி, தென்மேற்கு மத்திய அரபிக் கடல் பகுதிக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here