ஓடிடியில் படத்தை வெளியிடமாட்டோம் – ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அதிரடி!!!

0
ஓடிடியில் படத்தை வெளியிடமாட்டோம் - ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அதிரடி!!!
ஓடிடியில் படத்தை வெளியிடமாட்டோம் - ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் அதிரடி!!!

ஓடிடியில் படத்தை ரிலீஸ் பண்ண முடியாது என்று கூறிய ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட். அதிகளவில் ஓடிடியில் இருந்து ஆபர் வந்தும் ஒத்துக்கொள்ளவில்லை திரையரங்கில் மட்டுமே படத்தை வெளியிட போகிறோம் என்று திட்டவட்ட முடிவு.

ரிலையன்ஸ் தயாரிப்பில் 83 மற்றும் சூரியவன்ஷி..

கொரோனா ஊரடங்கால் அனைத்து திரையரங்குகளும் மூடபட்டுள்ளன. அதனால் பல திரைப்படங்கள் வெளி வராமல் இருக்கின்றன. இந்நிலையில் ஒரு சில படங்களை தயாரிப்பாளர்கள் நிதி நெருக்கடியின் காரணமாக அவர்கள் தயாரித்த படத்தை ஓடிடியில் வெளியிடுகிறார்கள் ஒரு சிலரை என்னதான் ஆனாலும் அவர்களது படத்தை திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதில் ஒரு குறிக்கோளுடன் இருக்கிறார்கள். இந்நிலையில் அனில் அம்பானியின் மிகப்பெரிய பிரமாண்ட நிறுவனமான ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 1983 உலகக்கோப்பை வென்றதை கருத்தில் கொண்டு 83 என்ற படத்தையும் அக்ஷய் குமார், ரோஹித் ஷெட்டி நடிப்பில் தயாராகியுள்ள சூரியவன்ஷி என்ற இரு திரைப்படங்களும் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்தை திரையரங்குகளில் மட்டுமே வெளியிட முடிவு செய்துள்ளதாக சிஇஓ ஷிபாசிஷ் சர்க்கார் தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் தயாரிப்பில் 83 மற்றும் சூரியவன்ஷி..
ரிலையன்ஸ் தயாரிப்பில் 83 மற்றும் சூரியவன்ஷி..

அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இணைந்து இந்தி சினிமாவில் பல திரைப்படங்களை ரிலையன்ஸ் தயாரித்து வருகிறது. கொரோனா 2 வைத்து அலை காரணமாக மூடபட்டுள்ள திரையரங்குகள் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதனால் இந்த இரு படத்தையும் திரையரங்குகள் திறந்த பின் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று கூறினார். அப்பொழுது ஷிபாசிஷ் சர்க்கார் பேட்டி ஒன்றில் இந்த இரு படங்களும் கடந்த ஒன்றரை வருடங்களாக வெளி வராமல் இருக்கிறது, இந்த முறை திரையரங்கு திறந்த பின் கட்டாயம் வெளி வரும் என்றும் கூறினார்.ஓடிடி தலத்தில் இருந்து நல்ல ஆஃபர்கள் மற்றும் பெரிய தொகைக்கு கேட்டனர், ஆனால் படத்தின் இயக்குனர்களும் நடிகர்களும் இந்த படத்தை கண்டிப்பாக திரையில் தான் மக்கள் பார்க்க வேண்டும் அப்பொழுதுதான் அவர்களுக்கு பிடிக்கும் மக்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறினார்கள் மற்றும் ஓடிடியில் வெளிவந்தால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தொழிலார்கள் பதிப்படைவார்கள் என்றும் திரைத்துறையின் வருமானம் குறைந்துவிடும் எனவே இந்த காரணத்தினால் தான் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என்று நாங்கள் முத்தேடுத்தோம் என்று கூறினார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here